இந்து அன்பகத்தில்..

14 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த யுவதிக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் இன்று (20.03.2021) காலை திருமணம் இடம்பெற்றது.

பாசுகி என்ற யுவதி 14 வருடங்களாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் வசித்து வந்துள்ளார். இவர் திருமண வயதினை அடைந்தமையினால் அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மாவின் ஏற்பாட்டில் திருமணம் இடம்பெற்றது.

அன்பகத்தில் வளர்ந்து வந்த பாசுகி என்ற யுவதி மேல்படிப்பினை முடிந்து தற்போது அரச பதவியில் அங்கம் வகிக்கின்றார். குறித்த திருமண நிகழ்வு வேப்பங்குளம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிகள் இந்து அன்பக மண்டபத்தில் நடைபெற்றிருந்ததுடன் சிவசீலன் என்ற இளைஞரே அன்பத்தில் வசித்த யுவதியினை திருமணம் முடித்தவராவர்.

இந் திருமண நிகழ்வில் மணமகன் வீட்டாரின் உறவினர்களும், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்கள், அன்பகத்தில் உள்ள சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இத் திருமண நிகழ்வினை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் சிறப்பாக முறையில் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.






