சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம் : வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்!!

332

Visaசுற்றுலா விசா பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சென்று பணிபுரிய வேண்டாம் என இலங்கை பிரஜைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு இலங்கையர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று பணிக்கு அமர்த்தும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறான நபர்கள் குறித்து 011-2879900 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிப்பும்படி இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.