வவுனியா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

1285

கொரோனா தொற்று..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து குறித்த நோயாளிக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரமே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவு நாளையதினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதுடன் குறித்த நோயாளி வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.