கொரோனா தொற்றாளர்..
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலை நான்காம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நபருக்கு நேற்றையதினம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து குறித்த நோயாளிக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரமே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்த நிலையில்,
குறித்த நோயாளி இன்று காலை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.