வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குமாறு கோரிக்கை!!

910

திண்மக் கழிவு..

திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் வகையில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குமாறு நகரசபையால் கோரப்பட்டுள்ளது.

நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் நகரசபை கழிவு அகற்றும் வாகனங்களுக்கு வழங்கும் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வாகனங்களுக்கு வழங்க வேண்டும்.

உணவுக் கழிவுகள் காலையிலும், ஏனைய கழிவுகள் மாலையிலும் சேகரிக்கப்படும் என்பதுடன், தரம் பிரித்து வழங்கப்பட்டாத திண்மகக் கழிவுகள் அகற்றப்படாது எனவும் நகரசபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பச்சை நிறப் பைகளில் உணவுக் கழிவுகளையும், சிவப்பு நிறப் பைகளில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளையும், மஞ்சள் நிறப் பைகளில் கடதாசி கழிவுகளையும், நீல நிறப் பைகளில் கண்ணாடி மற்றும் உலோகக் கழிவுகளையும் போடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உணவுக் கழிவுகள் அகற்றுவதற்கான பை 10 ரூபாய் வீதமும், ஏனைய கழிவுகள் அகற்றுவதற்கான மீள் பாவனைக்கு உட்படுத்தக் கூடிய பை ஒன்று 40 ரூபாய் வீதமும் செலுத்தி தேவையானவர்கள் நகரசபையிடம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.