வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கியும் ஒரு வருடமாக புனரமைப்பு காத்திருப்பில்!!

1427

கூமாங்குளம் பிரதான வீதி..

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி கடந்த பல வருடகாலமாக போக்குவரத்துக்கு ஒவ்வாத வகையில் பழுதடைந்து குன்றும் குழியுமாக காணப்பட்ட நிலையில் கூமாங்குளம் பிரதான வீதியினை செப்பனிடும் பணிக்கு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது.

வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினுடாக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடனான இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டத்தினூடாக கூமாங்குளம் பிரதான வீதியின் 1.65 கிலோமீற்றர் தூரத்தினை காபட் வீதியாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீன அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

கடந்த வருடம் (10.03.2020) அன்று குறித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் இன்று (26.03.2021) வரை குறித்த வீதியினை காபட் வீதியாக செப்பனிடும் பணிக்குரிய எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக குறித்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் , சாரதிகள் தினசரி பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் குறித்த சீன அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,

வவுனியா மாவட்டத்தின் பல வீதிகள் எமது நிறுவனத்தினராலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக குறித்த வீதியினை செப்பனிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இரு மாத காலத்தினுள் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தனர்.