கௌதம் மேனனின் சொத்துக்கள் ஏலம் விடப்படுகின்றன!!

544

Kowthamஇயக்குனர் கௌதம்மேனன் சொத்துக்கள் ஏலத்துக்கு வருகிறது. கடனை திருப்பி செலுத்தாததால் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

கௌதம்மேனன் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல ஹிட் படங்களை எடுத்துள்ளார்.

தற்போது அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் சொந்தமாக பட நிறுவனம் தொடங்கி நடுநிசி நாய்கள், வெப்பம் உள்ளிட்ட சில படங்களையும் தயாரித்தார்.

அவை சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் கௌதம்மேனனுக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் பண பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.

தொடர்ச்சியாக நீதிமன்றமும் அவர் சொத்துக்களை ஏலத்துக்கு விடுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கௌதம் மேனனுக்கு சொந்தமாக இந்திரா நகர் வீடு 7 ஆயிரத்து 91 சதுர அடியில் சொத்து உள்ளது. இவற்றை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

அதை திருப்பி செலுத்தாததால் வங்கி ஏலத்துக்கு கொண்டு வருகிறது. இந்த சொத்துக்களின் மதிப்பு 12.26 கோடி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.