
காணாமல் போன மலேசிய விமானத்தில் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்ததாக கருதப்படும் நபரின் உருவம் கால்பந்து வீரர் பலோடெலியுடன் ஒத்துப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.,370 என்ற விமானம், கோலாலம்பூரிலிருந்து கடந்த 7ம் திகதி நள்ளிரவு சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டது.
227 பயணிகள், 12 ஊழியர்கள் அடங்கிய இந்த விமானம் சிறிது நேரத்தில் விமான கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது வரை எங்கு சென்றது, என்ன ஆனது என தெரியவில்லை.
தவிர இதில் இருவர் போலி கடவுச்சீட்டில் மூலம் பயணம் செய்துள்ளனர், இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருவர் இத்தாலிய கால்பந்து வீரரான மரியோ பலோடெலி மாதிரி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து மலேசிய விமானத்துறை அமைச்சர் அசாருதின் அப்துல் கூறுகையில், உங்களுக்கு பலோடெலியை தெரியுமா, இவரின் உருவம் எப்படி இருக்கும், இதை போலத்தான் ஒருவர் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இவர் கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால், அமைச்சர் கூறிய கருத்து இனவெறியை தூண்டுவதாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.





