புகையிரதத்தில் நசுங்கி உ யிரிழக்க வேண்டிய நபர் : நொடிப் பொழுதில் காப்பாற்றிய பொலிஸ்!!

1554

இந்தியாவில்..

இந்தியாவில் இரயிலில் சி.க்கி உ.யிரிழக்க வேண்டிய நபரை, பொலிசார் ஒருவர் தன்னுடைய சமயோசித செயலால் கா.ப்பாற்றிய வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் இரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் இரயிலில் ஏற முயன்றாரோ அல்லது இறங்க முயன்றாரோ என்பது சரியாக தெரியவில்லை.

ஆனால், இரயில் புறப்படும் போது, திடீரென்று அவர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு நடைமேடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக ஓடி, சாமர்த்தியமாக செயல்பட்டு, அவரை இரயில் மற்றும் நடைமேடைக்கு இடையில் சிக்காமல் வெளியில் இழுத்தார்.

இந்த வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அதில் இரயிலில் இருந்து தடுமாறிய நபர் சற்று தூரம் இழுத்துச் செல்வது போன்று உள்ளது. உடனே பொலிஸ் அதிகாரி ஓடி வந்து அவரை காப்பாற்றி வெளியில் இழுக்கிறார்.

நடைமேடைக்கும் அடியில் அவர் கால் சி.க்கியிருப்பது போன்று தெரிந்தாலும், அதன் பின் அந்த முதியவர் சாதரணமாக எழுந்து நடந்து செல்கிறார். இதைக் கண்ட இணையவாசிகள் சாதுர்யமாக செயல்பட்டு அவரைக் காப்பாற்ற உதவிய பொலிசாரை பாராட்டி வருகின்றனர்.