லட்சுமி மேனனை பாதுகாக்கும் விஷால் : கடுப்பில் இளம் நாயகன்!!

469

Vishal-Lakshmi-Menon

நடிகை லட்சுமிமேனனுடன் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆசைப்பட்ட சக நாயகனை கடைசிவரை பார்க்க விடாமலேயே தடுத்திருக்கிறார் நடிகர் விஷால்.

இந்த இரகசியத்தை சம்பந்தப்பட்ட நடிகரே வெளிப்படையாக பேசியதால் அதற்கு விஷால் விளக்கம் கொடுக்க வேண்டியதாகி விட்டது.

விஷால் தயாரித்து, ஹீரோவாக நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், இந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்கிறப்போ ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு நான் போக ஆசைப்பட்டேன். படத்துல விஷால்- லட்சுமிமேனன் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருந்துச்சு.

அதனால விஷாலுக்கு ரெண்டு, மூணு தடவை போன் பண்ணினேன். அப்போ விஷால் “இல்ல மச்சான் நீ வர வேண்டாம்னு” தடுத்துட்டான்.

அப்புறம் நானே ஒரு தடவை அவன்கிட்ட சொல்லிக்காம அவனோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டேன். அன்னைக்கு லட்சுமிமேனனோட சீன்ஸ் இல்லாததுனால அவங்களை பார்க்க முடியல. எதுக்கு லட்சுமிமேனனை விஷால் பாதுகாக்குறார்னு தெரியல, அதை விஷால் சொல்லியே ஆகணும் என்றார்.

இதற்கு பதிலளித்த விஷால் எனக்கும், விஷ்ணுவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால முதல்ல இதுக்கு நான் விளக்கம் சொல்லிடுறேன். நான் லட்சுமிமேனன் கிட்ட இருந்து தான் விஷ்ணுவை பாதுகாக்கிறேன்.

அந்தப் பொண்ணுக்கு இப்போ 17 வயசு தான் ஆகுது. ஆனா வயசுக்கு மீறிய முதிர்ச்சி இருக்கு. அப்பா மகனையே கைது பண்ணி ஜெயிலுக்கு கூட்டிட்டு போற மாதிரி சீன்கள் படங்கள்ல, வரும், அப்படி ஒரு நிலைமை விஷ்ணுவோட ரியல் லைப்ல வந்துடக்கூடாதுன்னு தான் நான் அப்படி செஞ்சேன்.

மத்தபடி வேறு ஒண்ணும் இல்ல. இனிமே விஷ்ணு இதைப்பத்தி பேசினா அவன் வாங்கி வெச்சிருக்கிற கிரிக்கெட் பேட்டாலேயே அவனுக்கு பதில் சொல்வேன் என்றார்.

விழாவுக்கு ஹீரோயின் லட்சுமிமேனன் வராத போதும் அவருக்காக இரண்டு இளம் ஹீரோக்கள் சண்டை போட்டுக்கொண்டது விழாவுக்கு வந்திருந்தவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.