வவுனியாவில் ரிஷாட் பதியுதீன் விடுதலையை முன்னிறுத்தி முனாஜித் மௌலவி கவனயீர்ப்பு போராட்டம்!!

1575

முனாஜித் மௌலவி..

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார்கள் என்ற கு.ற்றச்சாட்டின் அடிப்படையில் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கடந்த 24ம் திகதி அதிகாலை ப.யங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அவரின் விடுதலையினை முன்னிறுத்தி வவுனியாவை சேர்ந்த மௌலவி முனாஜித் அவர்களினால் தொடர் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பூட்சிற்றிக்கு முன்பாக இன்று (26.04.2021) காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது. தனியொரு மனிதராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மௌலவி முனாஜித் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை இதற்கு முன்பு கைது மேற்கொண்டமைக்கு பல காரணங்கள் தெரிவித்தனர். இப்போது கைது செய்வதற்கு உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார் என கைது செய்துள்ளனர். நோன்பு மாதத்தின் இவ்வாறான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டமையினை வன்மையாக கண்டிக்கின்றேன்.

ரிஷாட் பதியுதீன் அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு த.ண்டனை வழங்குங்கள் ஆனால் அவர் இப்படி செய்யமாட்டார். அவர்களை விடுதலை செய்து வி.சாரணைகளை மேற்கொள்ளுங்கள் அவரின் பாராளுமன்ற உறுப்புறுமையினை நீக்க வேண்டாம்.

அவர்களை விடுதலை செய்யும் வரை எனது போ.ராட்டம் தொடரும் 90 நாட்கள் ஆனாலும் இவ்விடத்தில் எனது போ.ராட்டம் தொடரும் என தெரிவித்து தனியொரு மனிதராக போ.ராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.