தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்?

452

Murali

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான இறுதி பட்டியலில் இலங்கையின் முரளிதரன், இந்தியாவின் சச்சின், தென்னாபிரிக்காவின் கலிஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஷேன் வோன் இடம்பெற்றுள்ளனர்.

பிரபல கிரிக்கெட் இணையதளத்தின் சார்பில் 1993ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

தலைமுறையின் சிறந்த வீரர் என்ற பெயரிலான விருதுக்கு இந்தியாவின் சச்சின், இலங்கையின் முரளிதரன், மேற்கிந்திய தீவுகள் அணியின் லாரா, தென்னாபிரிக்காவின் கலிஸ், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

டிராவிட், லட்சுமண், வக்கார் யூனிஸ், இயன் சப்பல் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என 50 பிரபலங்கள் அடங்கிய நடுவர்கள் குழு சிறந்த வீரரை தேர்வு செய்கிறது.

விருதுக்கான மூன்று பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் சச்சின், ஷேன் வோன், கலிஸ் தெரிவாகியுள்ளனர்.