உலக கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியே வெற்றிபெரும் : மைக்கல் வோகன்!!

624

michael-vaughan

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியே டுவென்டி-20 உலக கிண்ணத்தை வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் மைக்கல் வோகன் கணித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஐ.சி.சி சார்பில் 5வது டுவென்டி–20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நாளை(16.03) தொடங்குகிறது.

இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் கிண்ணத்தை கைப்பற்ற போகும் அணி எது என இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் மைக்கல் வோகன் கணித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இம்முறை டுவென்டி–20 உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் , இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு உள்ளது.

இருப்பினும் எனது கணிப்பின் படி திறமையான சுழற்பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணியே கிண்ணத்தை வெல்லும் என தெரிவித்துள்ளார்.