ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் : ஊழியர்களுக்கான அவசர அறிவித்தல்!!

1136

அவசர அறிவித்தல்..

நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் சேவையாற்றும் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

உணவு மற்றும் பானங்களை அருந்தும் போது முககவசத்தை கழற்ற வேண்டும் என்பதால், பலர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதால், கோவிட் 19 வைரஸ் பரவலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது அலுவலகங்களில் பணிப்புரிவோர் தமது பணியிடங்களில் முககவசம் அணிதல், இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இதனை தவிர பணியிடங்களில் இருப்போரின் உடல் உஷ்ணத்தை பரிசோதிக்க தேவையான வசதிகளை நிறுவனங்களின் பிரதானிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.