வவுனியாவில் பொலிசார் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி!!

1105

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் பொலிசார் மற்றும் சுகாதார துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று (11.05) முன்னெடுக்கப்பட்டது.

இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

அந்த வகையில், வவுனியா பொலிசார் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தவர்களுக்கான இரண்டாவது டோஸ் கொவிட் 19 தடுப்பு ஊசிகள் ஏற்றும் நடவடிக்கை வவுனியா பொது வைத்தியசாலையில் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்திற்கு 1500 தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் 1010 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை முன்னரே ஏற்றியிருந்தனர். இரண்டாம் கட்டமாக பொலிசார் மற்றும் சுகாதார துறையினருக்கு இத் தடுப்பூசிகள் ஏற்பட்டன.