
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார 20க்கு இருபது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
T20 உலககிண்ண போட்டிக்கு பின் 20-20 ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சங்ககார அறிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்ககார இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
36 வயதான இவர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இந்த ஓய்வு முடிவு எடுத்திருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுவரை 50 T20 போட்டிகளில் விளையாடியுள்ள இடது கை ஆட்டக்காரரான சங்ககார 1,311 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 7 அரைசதங்களும் அடங்கும்.





