வவுனியா கொரோனா சிகிச்சை மையத்தில் வவுனியாவை சேர்ந்தவர்கள் உட்பட 155 நோயாளர்கள் அனுமதி!!

1411

கொரோனா சிகிச்சை மையத்தில்..

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் உட்பட 155 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு நேற்று (12.05.2021) இரவு 11.00 மணி தொடக்கம் நோயாளர்கள் உள்வாங்கப்பட்டனர்.

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் 31 பேரும், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 நபர்களும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த 122 நபர்களும் என 155 (ஆண் நோயார்கள்) கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான மூன்று நேர உணவுகள், மற்றும் ஏனைய வசதிகளை வன்னி இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதுடன் அவர்களுடைய சுகாதாரம், மருத்துவம் போன்ற வசதிகளை வவுனியா சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.