வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர்கள் : 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!!

2164

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில்..

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிடாச்சூரி, கோதண்டர் நொச்சிக்குளம் ஆகிய இரு கிராமங்களில் 2 கொரோனா சமூகத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

அவர்களுடன் தொடர்பைப் பேணிய 19 குடும்பங்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் போதே இவ்விரு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அத்துடன், இவர்களில் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் 40 நாட்களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியவராவார். குறித்த நபரை பார்வையிடுவதற்காக சென்ற நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.