இலங்கையில் ஒரு மாதத்திற்கு 600 பேர் இறக்கலாம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

888

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்று நோய் பரவி வருவதில் மாற்றம் ஏற்படுவதை காணமுடியவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் நிலைமையில் ஒரு மாதத்திற்கு சுமார் 600 நோயாளிகள் உயிரிழக்கலாம் என அந்த சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிரசாத் கொழம்பகே கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வைரஸ் பரவலை தடுக்க சுகாதார பிரிவின் தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்தளவுக்கு நம்பிக்கை வைக்க முடியாது.

சுகாதார கொள்ளவு என்பது கட்டில்கள் மாத்திரம் அல்ல. தற்போதைய சந்தர்ப்பத்தில் 10 ஆயிரம் கட்டில்கள் தயாரிப்பதில் பிரயோசனம் இல்லை. மருத்துவர்கள், தாதிகள், மருத்துவ உபகரணங்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள் என்பன அடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-