கொரோனா..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள்,

குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இன்று காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

புதிதாக 3,43,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 ஆக உயர்ந்தது. புதிதாக 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,44,776 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,00,79,599 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 37,04,893 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 83.50% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 15.41% ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் இதுவரை 17,92,98,584 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.





