கொரோனா..

எதிர்வரும் ஜூன் மாதத்தில் கோவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவல் நிலைமை அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகபேறு மற்றும் பெண்ணோவியல் துறையின் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொற்று நோயின் தீர்மானகரமான சந்தர்ப்பத்தை நாடு என்ற வகையில் எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது தொற்று நோயின் தீர்மானகரமான சந்தர்ப்பத்திற்கு நாடு வந்துள்ளது. நாளுக்கு நாள் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இலங்கையில் தற்போது காணப்படுவது தொற்று நோய் பரவலின் உச்ச நிலையல்ல. ஜூன் மாதமளவில் தொற்று நோய் பரவல் உச்சமடையலாம் என நாங்கள் நினைக்கின்றோம். தற்போது எமது பாதுகாப்பை அதிகரித்து கொள்ள வேண்டும் எனவும் ஹேமந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.





