காணாமல் போன மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது, இன்னும் 14 நாட்களில் சகல தகவல்களும் வெளியாகும் : சிங்கள சோதிடர்!!

772

astroமர்மமான முறையில் காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடரான சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

மலேசிய எயார்லைன்ஸ் விமானம் விமானியினால் திட்டமிட்டு கடத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் 14 நாட்களில் சகல தகவல்களும் வெளியாகும் எனவும் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

சனி பகவான் துலாராசியில் சஞ்சரித்து இறுதி கட்டத்திற்கு வரும் சந்திப்பத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல வாயுக்களை கொண்டுள்ள துலா ராசியில் சஞ்சரிக்கும் போது இடம்பெற்ற இந்த சம்பவம் நிச்சயமாக விபத்தாக இருக்க முடியாது.

இது பிரதான விமானியின் முழுமையான உதவியுடன் மிகவும் சூட்சுமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் என்பது தெளிவானது.

இந்த விமானம் கடத்தப்பட்டது என்பதை தெளிவான அறிந்து கொள்ள குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மேலான காலம் செல்லும் என்பதை மிகவும் பொறுப்புடன் என்னால் கூற முடியும் என சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.