வவுனியா எல்லப்பர்மருதங்குளத்தில் கொரோனா தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

1126

எல்லப்பர்மருதங்குளத்தில்..

வவுனியா, எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கிராமத்தில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று (19.05) முன்னெடுக்கப்பட்டன.

வவுனியா சுகாதாரப் பிரிவினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையும் இணைந்து இச் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர். வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் எல்லப்பர்மருதங்குளத்தைச் சேர்ந்த மூவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிராமத்தில் கொரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் முகமாக கிராமத்தின் கிராம அலுவலர் அலுவலகம், பொதுநோக்கு மண்டபம்,

தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களின் வீடுகள், மக்கள் கூடும் இடங்கள், வியாபார நிலையங்கள என்பவற்றுக்கு தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய வீடுகளும் இதன்போது தனிமைப்படுத்தப்பட்டதுடன், கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வவுனியா தெற்கு பிரதேச சபையால் கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.