புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 326 பேருக்கு கொரோனா : 422 ஊழியர்கள் தலைமறைவு!!

1101

ஆடைத்தொழிற்சாலையில்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கோவிட் கொத்தணி கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றும் 422 பேர் பரிசோதனைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையில் கடந்த 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் 266 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆடைத்தொழிற்சாலையில் இதுவரையில் 326 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அங்கு பணியாற்றும் 422 பேர் இதுவரை பரிசோதனைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளனர்.

இவர்களது விவரங்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.