அநாதரவற்ற நிலையில்…

வவுனியா பழைய பேருந்து நிலைய வர்த்தக தொகுதியிலுள் நோயினால் பிடிக்கப்பட்ட அநாதரவற்ற நிலையில் வயோதிப தாயாரொருவர் காணப்பட்டதனையடுத்து வர்த்தக சங்கத்தின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கட்டிடத் தொகுதியின் வர்த்தக நிலையங்களுக்கு அருகில் நோயினால் பிடிக்கப்பட்டதுடன் அநாதவற்ற நிலையில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது அவ்விடத்திலிலேயே மலம், சலம் கழித்து சுகாதார சீர்கேட்டுடன் வயோதிப பெண்ணொருவர் நீண்ட காலமாக அவ்விடத்தில் யாகசம் பெற்று வந்துள்ளார்.

அவரின் நிலமையினை கருத்தில் கொண்டும் சுகாதார சீர்கேட்டினை தடுக்கும் முகமாகவும் வர்த்தகர்களினால் வவுனியா வர்த்தக சங்கத்தினரிடம் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து வர்த்தக சங்கத்தினர் உரிய தரப்பினருக்கு தகவலை வழங்கியிருந்தனர்.

குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட வவுனியா பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் கி.வசந்தரூபன் வயோதிய தயாரின் நிலமைகளை நேரில் அவதானித்துடன் அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்குறிய நடவடிக்கையில் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் குறித்த வயோதிப தயாருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகளையும் இணைந்து அவரை முதியோர் இல்லத்தில் இணைப்பதற்குறிய நடவடிக்கையினையும் வவுனியா பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் முன்னெடுத்துள்ளார்.






