இரு வாரங்களுக்கு..

இலங்கையை முழுமையாக 14 நாட்கள் மூடவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக போலித் தகவல் பிரச்சாரம் செய்யப்படுவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 14 நாட்கள் நாட்டை மூடவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக பிரச்சாரம் செய்யப்படும் செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பதிவாகும் போலி செய்திகள் தொடர்பில் ஏமாற வேண்டாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை இரண்டு வாரங்களிற்கு முடக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். பொதுசுகாதார நிபுணர் என்ற நான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளேன். மருத்துவர்களின் அமைப்புகளும் இதே வேண்டுகோளை விடுத்துள்ளன.

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-தமிழ்வின்-





