அரசின் அறிவிப்பு..

நாட்டை 14 நாட்களுக்கு முடக்குவது குறித்து அரசாங்கம் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 14 நாடக்கள் முடக்க நிலை அறிவிக்கப்பட வேண்டுமென பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் இது குறித்து கருத்து வெளியிடுவதனைத் தவிர்த்து ஜனாதிபதி கோட்டபாயவை சந்தித்து இது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

முடக்கம் தொடர்பான கோரிக்கைள் விடுக்கப்படுவது ஜனாதிபதிக்கு தெரியும் எனவும் இது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் முடக்க நிலையை அறிவிப்பதா இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதன் பின்னர் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். மக்களின் ஒத்துழைப்புடனேயே இந்த நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-தமிழ்வின்-





