விபத்தில்..

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கோரவிபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணடைந்துள்ளார்.

வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து கண்டிவீதி வழியாக பயணித்த டிப்பர் வாகனம் மணிக்குக்கூட்டு கோபுர சந்தியில் சென்றுகொண்டிருந்த போது குறித்த சந்தியால் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இராஜேந்திரம் (வயது 65) என்ற முதியவரே மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் டிப்பர் வாகனமும், சிறிய ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (21.05) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புகையிரத நிலைய வீதியில் இருந்து சென்ற சிறிய ரக மோட்டார் சைக்கிள் ஒன்று மணிக்கூட்டு கோபுர சந்தியில் ஏ9 வீதியில் திரும்ப முற்பட்ட வேளை,

யாழ் வீதியில் இருந்து கண்டி வீதிக்குள் நுழைந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 48 வயது மதிக்கதக்க நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குறித்த விபத்து இடம்பெற்ற போது வவுனியா நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து பொலிசார் கடமையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






