சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் விராத் கோலி முறியடிப்பார் : அப்பாஸ்!!

394

Virat-Kohli-5சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் கோலி முறியடிப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜாகிர் அப்பாஸ் அளித்த பேட்டியில், சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகள் அனைத்தையும் வீராத் கோலி தான் முறியடிப்பார்.

இந்திய துடுப்பாட்ட வரிசையில் முன்னணி வீரராக உள்ள கோலியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது.

பாகிஸ்தான் அணியிலும் நிறைய துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர், அவர்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இளம் வீரரான அகமது ஷேசாத் திறமைமிக்க வீரராக உள்ளார், இனிவரும் காலங்களில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்.

டுவென்டி-20 உலக கிண்ணப் போட்டிகளில் டோனி பங்கேற்பது இந்திய அணிக்கு பலம் தான். எனினும் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணி தயாராக உள்ளதென தெரிவித்துள்ளார்.