இலங்கையில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய இருவர் கைது!!

1000

http://www.dreamstime.com/stock-photo-gold-bars-image23821650கொழும்பில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திச் சென்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று (17) காலை சென்னை சென்ற பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர்.

அப்போது சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இப்ராகிம் (48), அவரது மனைவி சமீர்பானு (40), இருவரும் இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்று வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இருவரையும் தனித்தனியே அறைக்குள் அழைத்து சென்று சோதித்தனர்.

அப்போது இருவரின் ஆசன வாயில் மறைத்து வைத்திருந்த கருப்பு பார்சலை கண்டுபிடித்தனர். அதில் தலா 600 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றின் மதிப்பு இந்திய 36 லட்சம். அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.