காப்பகத்தில் இருந்து தப்பி வந்த கர்ப்பிணிச் சிறுமிகள் இருவர் கைது!!

704

Arrகாப்பகத்தில் இருந்து தப்பி வந்ததாக கூறப்படும் இரண்டு கர்ப்பிணிச் சிறுமிகள் கல்பிடிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு (17) கல்பிட்டி – நாரக்கல்லிய பிரதேசத்தில் பஸ்தரிப்பிடத்திற்கு வந்திருந்த வேளையே இரு சிறுமியரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் புத்தளம் – மதுரகம பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எனவும், மற்றயவர் உடுகம – மொரகஹயாய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி எனவும் தெரியவந்துள்ளது.

தமது பால்ய கணவர்களுடன் வாழ்ந்த வேளை கர்ப்பமடைந்த இவர்கள், நீதிமன்ற உத்தரவின் படி மொரட்டுவை பகுதியிலுள்ள தாய் சேய் மத்திய நிலையம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டனர்.

எது எவ்வாறு இருப்பினும் காப்பகத்தில் இருந்து இவர்கள் தப்பி வந்ததற்கான உறுதியான காரணம் எதனையும் இதுவரை பொலிஸாரிடம் கூறவில்லை.

எனினும் தமது காதலர்களுடன் மீண்டும் தப்பிச் செல்லும் திட்டத்துடன் வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான இரு சிறுமிகளையும் மீண்டும் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.