நீர்கொழும்பில் பஸ்- ஆட்டோ மோதி 4 பேர் பலி!!

1182

accidentஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்து நீர்கொழும்பு, நாரம்மல பொலிஸ் பிரிவில் மெட்டியாகன பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தை அடுத்து பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.