கிணற்றில் தவறிவிழுந்த 4 வயது மகளை காப்பாற்றச் சென்ற தந்தை : நடந்த விபரீதம்!!

959

தமிழகத்தில்..

கிணற்றில் விழுந்த தனது 4 வயது கு.ழந்தையை கா.ப்பாற்றுவதற்கு முயன்ற தந்தை, கு.ழந்தையுடன் உ.யிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேவுள்ள கைலயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை தனது மகள் சாய்பிரநித்தாவை (4) அழைத்துக் கொண்டு இயற்கை உபாதை கழிக்க வயல்வெளி பக்கம் சென்றுள்ள நிலையில், அவரது மகள் திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட முருகேசன் அவரும் கிணற்றிற்குள் குதித்துள்ளார். இவரது சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வந்ததும் முதலில் குழந்தையின் உடலைக் கண்டறிந்து, பின்பு 1 மணிநேரம் தேடுதலுக்குப் பின்பு முருகேசனின் உடலை மீட்டுள்ளனர். இருவரது உடலையும் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.