வவுனியாவில் உயிரிழந்த நபருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று!!

2437

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணி பகுதியை சேர்ந்த குறித்த நபர் நேற்றயதினம் (23.05.2021) காலை சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் மரணமடைந்திருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.