பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்!!

1298

அறிவித்தல்…

2020- 2021 ஆம் கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை சான்றிதழ்கள் இன்றி சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பயணக்கட்டுப்பாடு காரணமாக இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற இணைய ஊடகச் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2020- 2021 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் இணைந்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை 2021 மே 21 ஆம் திகதி முதல் 2021 ஜூன் 11 வரையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்கலாம்.

இதன்போது பாடசாலை அதிபரின் சான்றிதழ் மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரண நிலை சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது, மாணவர்கள் தேவையான சான்றிதழ்களை பெற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கலாம் என்று ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.