பசார் வீதி இலங்கை வங்கி..
வவுனியாவில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது வாடிக்கையாளர் சேவையினை வழங்கிய பசார் வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வவுனியாவில் இன்று காலை 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதன்போது வவுனியா புகையிரத நிலைய வீதி மற்றும் இலுப்பையடிப் பகுதியில் உள்ள வங்கிகளில் அதிகமான மக்கள் கூட்டம் இருந்த போதும் அங்கு கடமையில் இருந்த வங்கி உத்தியோகத்தர்களும்,
பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சமூக இடைவெளிகளை பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவறுத்தல்களை வழங்கி சுகாதார நடைமுறைகளை கவனித்தனர். ஆனால், பசார் வீதியில் அமைந்துள்ள அரச வங்கியான இலங்கை வங்கியில் மக்கள் சமூக இடைவெளியைப் பேணாது நெருக்கமாக நின்றனர்.
இதனையடுத்து அங்கு சென்ற சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் இணைந்து வங்கி உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியதுடன், சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றா விடின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.