வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கலைநாதன் இராகுலன் தனது கடமைகளை இன்று (25.05.2021) காலை 8.30 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின்பழைய மாணவர்களில் ஒருவரான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாக மாணி பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.
முன்னர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமைகளை ஏற்று பல்வேறு தேவைப்பாடுகளோடு காணப்பட்ட வைத்தியசாலையை பல்வேறு தரப்பினருடனும் உரிய அதிகாரிகளோடும்,
நன்கொடையாளர்களோடும் கலந்துரையாடி தேவைகளை நிறைவு செய்து மாவட்ட மக்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்கும் வைத்தியசாலையாக மாற்றுவதில் பெரும்பங்காற்றினார்.
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தீர்க்கமானதும் உறுதியானதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் நோயாளர் மற்றும் ஊழியர்களது பாதுகாப்பில் அதிக கரிசனை கொண்டிருந்தார்.
தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு மேலதிகமாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கொரோனா தடுப்பு இணைப்பாளராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.