தனியார் கல்லூரி..
வவுனியா, மன்னார் வீதியில் கலைமகள் விளையாட்டு மைதானம் முன்பாக உள்ள தனியார் கல்லூரி ஒன்று இன்று (25.05) சுகாதார பரிசோதகர்களால் பூட்டப்பட்டதுடன், மறு அறிவித்தல் வரை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தனியார் கல்லூரிகள் மற்றும் கணணி நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றை பூட்டுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், வவுனியா, மன்னார் வீதியில் கலைமகள் விளையாட்டு மைதானம் முன்பாகவுள்ள தனியார் கல்லூரி ஒன்று திறந்து இருந்ததுடன், அதனுள் 5 பேர் இருந்துள்ளனர். அத்துடன் இருவர் முககவசம் அணியாதும் இருந்துள்ளனர்.
அங்கு சென்ற சுகாதார பரிசோதகர்கள் அனுமதியின்றி குறித்த தனியார் கல்லூரி திறந்திருந்தமை மற்றும் அங்கு முககவசம் அணியாது சிலர் நின்றமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ததுடன் குறித்த கல்வி நிலையத்தை மறு அறிவித்தல் வரை பூட்டுமாறும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து குறித்த கல்லூரி பூட்டப்பட்டுள்ளதுடன், சுகாதார பரிசோதகர்களின் அனுமதி பெற்றே திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.