கொழும்பை அண்டிய கரையோர மற்றும் கடற்பரப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து!!

1854

கடற்பரப்பு…

இலங்கையின் மேற்கு மாகாண கரையோர பகுதிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் மூடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்த இரசாயன பொருட்கள் கடலில் கலந்துள்ளதால், அது கடல் சுற்றுச்சூழல் பேரழிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கியுள்ள இந்த பிளாஸ்டிக் காரணமாக எதிர்வரும் நாட்களில் இலங்கையின் மேற்கு பிரதேசம் மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

அத்துடன் இந்த பிளாஸ்டிக் துகள்கள் காரணமாக, அனைத்து கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடலில் காணப்படும் இந்த கழிவுகளை அகற்றுவது மிகவும் சிரமமானது எனவும் அவை கடற்கரை, கடல் மற்றும் கற்பாறைகளில் படியலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

விஷம் மற்றும் இரசாயனம் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த பிளாஸ்டிக் மிகவும் ஆபத்தானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.