இலங்கை அகதிகள் விடுதலை கோரி செந்தூரன் ஆர்ப்பாட்டம்!!

497

Senthuran

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன் மற்றும் இலங்கை அகதிகளை விடுதலை செய்யக்கோரி தமிழ் அமைப்புகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் க.அதியமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் செந்தூரன் உள்ளிட்ட இலங்கை அகதிகளை விடுதலை செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாஸ்கரன், மறத் தமிழர் சேனை செயலாளர் புதுமலர் பிரபாகரன், தமிழர் பண்பாட்டு ஆய்வு நடுவம் நிர்வாகி ராஜ்குமார், அருகோ, தமிழர் முன்னேற்ற படை நிர்வாகி கணேசன், தமிழ் தேசிய குடியரசு கட்சி பொதுச் செயலாளர் தமிழ்மணி, மே 17 இயக்க தலைவர் கார்த்திக், தமிழ்மண் மீட்பு இயக்க தலைவர் திருமாறன், புதுவை அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



-மாலைமலர்-