வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைப்பு!!

2446

5000 ரூபாய் கொடுப்பனவு…

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இன்று (05.06) வழங்கப்பட்டது.

சமுர்த்தி பயனாளிகளுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக சமுர்த்தி முத்திரை பெறும் 98 குடும்பங்களுக்கு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்கள், தொழில் பாதிப்புற்றோர், சிரேஸ்ட பிரஜைகள், நோய்பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ளிட்ட குடும்பங்கள் என்பனவே இவ்வாறு 5000 ரூபாய் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.