வவுனியா பொது வைத்தியசாலை வடமாகாண வைத்தியசாலையாக தரமுயர்வு!!

319

Vavuniya hospital

வவுனியா பொது வைத்தியசாலை வடமாகாண வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையை வடமாகாண வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான முன்மொழிவு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் இம்முன்மொழிவு நிறைவேற்றப்பட்டு தற்போது இவ்வைத்தியசாலை வடமாகாண வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தரம் உயர்வு வைத்திய சேவையை மேற்கொள்ளும் எங்களுக்கு மேலும் உற்சாகமளிக்கிறது. இவ்வைத்தியசாலையின் தரம் உயர்வுக்கு பெரும் பங்காற்றிய வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ந.குணசீலன் ஆகியோருக்கு இவ்வைத்தியசாலையின் சகல ஊழியர்களின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.