முடக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாடு : திறப்பதற்கு கடும் எதிர்ப்பு!!

1533

பயணக்கட்டுப்பாடு..

இந்தியாவில் பரவும் அச்சுறுத்தலான ‘டெல்டா’ கோவிட் இலங்கையில் பரவ ஆம்பித்துள்ளது இதனை சாதாரண விடயமாக கருத வேண்டாம். நாட்டை முடக்கி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள சூழலில் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது ஆபத்தானது,

என வைத்திய சுகாதார நிபுணர்கள் கோவிட் செயலணிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். வைரஸ் தொற்று வேகமாக பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதெனவும் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட் வைரஸின் மிக மோசமான தொற்றாக கருதப்படுகின்ற பி.1.617.2 என அடையாளப்படுத்தப்படும் இந்தியாவில் பரவும் ‘டெல்டா’ வைரஸ் பரவல் இலங்கையில் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார, வைத்திய நிபுணர்கள் நேற்றுமுன்தினம் காலையில் கூடிய செயலணிக்கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் தெமட்டகொடை பகுதியில் ஒரு சிலருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டாலும், வைரஸ் தொற்று வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்பதை ஒரே நாளில் கண்டறிந்து உறுதிப்படுத்த முடியாது.

இலங்கையில் இதுவரை காணப்பட்ட பி.117 என்ற வைரஸ் தொற்றை விடவும் ஐம்பது வீதம் அதிக வேகத்தில் டெல்டா வைரஸ் பரவும் என்பதை விஷேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர செயலணிக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-