கொரோனா..
கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் இரு பெண்கள் இன்று (21.06) மரணமடைந்துள்ளனர். வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர், குருதி சுத்திகரிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
அத்துடன் வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவர்களது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஏழு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே குறித்த ஏழு பேரில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இவ்வகையில் மரணமடைந்த இருவரும் வயது முதிர்ந்த பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.