வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 25 பேர் உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று!!

2540

கொரோனா..

வவுனியா மூன்றுமுறிப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 25 பேர் உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (21.06) வெளியாகின.

அதில் சூடுவெந்தபுலவு பகுதியில் எட்டு பேருக்கும், சூசைப்பிள்ளையார்குளம் வைரவர் கோவிலடி பகுதியில் எட்டு பேருக்கும், மறவன்குளம் பகுதியில் ஒருவருக்கும், சமனங்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், நெங்கேணி பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் நான்கு பேருக்கும், மாமடு பகுதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் இருவருக்கும்,

கல்மடு பகுதியில் இருவருக்கும், செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் இருவருக்கும், பூனாவ பகுதியில் ஒருவருக்கும், முருகனூர் பகுதியில் ஒருவருக்கும், போகஸ்தலாவ பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஆசிக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

வவுனியா தெற்கு குருந்துபிட்டிய பகுதியில் இருவருக்கும், பட்டாணிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், யாழ் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த வவுனியாவில் உள்ள ஒருவருக்கும் என 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட சூடுவெந்தபுலவு மற்றும் சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளதுடன், 25 தொற்றாளர்கள் வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்கள் ஆவார்.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, வவுனியாவில் இரு ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணக்கை 100 கடந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.