
T20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுக்களால் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று ஆரம்பமான சூப்பர் 10 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பாகிஸ்தானை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 130 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 131 என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி சார்பில், விராட் கோலி 36 ஓட்டங்களையும் ரெய்னா 35 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் விளாசினர்.
இதன்படி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த இந்தியா 131 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.





