செட்டிகுளம்…
செட்டிகுளம் கப்பாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று (22.06) செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா செட்டிகுளம், கப்பாச்சி பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் இளைஞர் ஒருவரின் உடமையில் இருந்து 3 போத்தல் கசிப்பினை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக வி.சாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். கப்பாச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.