கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2800 ஐ தாண்டியது!!

836

கொரோனா..

நாட்டில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் (23.06.2021) நாட்டில் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வயது வரையிலானவர்களில் 10 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 34 மரணங்களும் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் பதிவான 45 மரணங்களில் 18 பேர் பெண்கள் எனவும், 27 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2814 ஆக உயர்வடைந்துள்ளது.