இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்!!

1329

கப்பலில் தீப்பரவல்..

இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மஹரவான வெளிச்சவீட்டுக்கு கிழக்கே 480 கடல்மைல் தூரத்தில் பயணித்த கப்பலின் இயந்திர அறையில் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.