12 மாம்பழங்களை 1.2 லட்சத்துக்கு விற்ற சிறுமி : ஏழை மாணவிக்கு நடந்த அதிசய சம்பவம்!!

758

ஜார்கண்டில்…

ஜார்கண்டில் 11 வயது சிறுமி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற தனது கனவை மாம்பழம் விற்று நிறைவேற்றினார்.

இந்திய மாநிலம் ஜார்கண்டில், ஜம்ஷெட்பூரில் ஒரு ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் 11 வயது துளசி குமாரி, 5-ஆம் வகுப்பு படிக்கிறார். ஊரடங்கு காலத்தில் துளசியின் பெற்றோருக்கு வேலை இல்லாத காரணத்தினால், குடும்பத்தில் மேலும் ஏழ்மை தாண்டவமாடியது.

இந்தநிலையில், துளசிக்கு ஒன்லைன் வகுப்பிற்காக ஒரு ஸ்மார்ட்போன் தேவைப்பட்டுள்ளது. ஆனால் குடுபத்தில் வசதி இல்லாத காரணத்தினால், பெற்றோர்களால் மகளுக்கு போன் வாங்கி கொடுக்க முடியவில்லை.

இருப்பினும், எப்படியாவது ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி, தனது படிப்பை தொடரவேண்டும் என்ற கனவில், துளசியை சாலை ஓரத்தில் மாம்பழங்களை விற்பனை செய்ய தொடங்கினார்.

அனால் அதில் கிடைத்த வருமானம் குடும்பத்துக்கு தினசரி உணவுக்கே சரியாக இருந்துள்ளது. இந்த நிலையில், துளசியின் வாழ்க்கையில் ஒரு அதிசயம் நடந்தது.

ஏழை சிறுமியின் நிலைமையைப் பற்றி தெரியவந்த மும்பை தொழிலதிபர் Ameya Hete, துளசிக்கு உதவும் வகையில், அவரிடமிருந்து ஒரு மாம்பழத்திற்கு 10,000 ரூபாய் என, ஒரு டஜன் மாம்பழங்களை மொத்தம் 1.2 லட்சத்துக்கு வாங்கினார்.

மேலும் அந்த பணத்திலிருந்து, துளசி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஒரு புதிய ஸ்மார்ட்போனையும், படிப்புக்கு தேவையான சில உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இது குறித்து தொழிலதிபர் Ameya Hete கூரியதாவது, நான், பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் துளசியை பற்றி அறிந்து கொண்டேன். துளசியின் கதை என் இதயத்தை தொட்டது.

வறுமையில் போராடும் எண்ணற்ற குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களது கல்வியும் பாதிக்கப்படுகிறது. ஆனால், தனது வாழ்க்கையில் பல துன்பங்கள் இருந்தபோதிலும், துளசி தன் கனவுகளுக்காக எடுத்த முயற்சிகள் என்னை கவர்ந்தது, என்று கூறினார்.